மகளின் சடலத்தை பார்த்த நிமிடம் முதல் இப்போது வரை நடப்பது என்ன? ஸ்ரீமதியின் தாய் சொல்லும் தகவல்கள்

மகள் ஸ்ரீமதி மரணம் குறித்து அவரின் தாய் செல்வி, தந்தி தொலைக்காட்சிக்கு விரிவாக பேட்டி அளித்திருக்கிறார்...
x

மகள் ஸ்ரீமதி மரணம் குறித்து அவரின் தாய் செல்வி, தந்தி தொலைக்காட்சிக்கு விரிவாக பேட்டி அளித்திருக்கிறார்... மகளின் சடலத்தை பார்த்த அந்த நிமிடம் முதல் இப்போது நடந்து வரும் விசாரணை வரை அவர் சொல்வது என்ன?

செல்வி, உயிரிழந்த ஸ்ரீமதியின் தாய்

மார்ச்சுவரியில் தான் என் மகளின் உடலை பார்த்தேன்

மகள் அணிந்திருந்த உள்ளாடை விலகி இருந்தது

உடல் விரைத்து போய் காணப்பட்டது

ஸ்ரீமதி அணிந்திருந்த நகைகள் அவர் உடலில் இல்லை

தற்கொலை இல்லை என அப்போதே நாங்கள் உறுதி செய்தோம்

எனக்கும் என் மகளுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை

நானும் ஸ்ரீமதியும் ஃப்ரெண்ட்லியாக தான் பேசுவோம்

கலவரத்துக்கு நாங்கள் காரணமில்லை

வன்முறை என்பது எங்களின் நோக்கமில்லை

வழக்கை திசை திருப்ப பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு செய்த செயல் இது

ஸ்ரீமதி அணிந்திருந்த உடையின் பாக்கெட்டில் தற்கொலை கடிதம் இருந்ததாக சொன்னார்கள்

எங்களிடம் அப்போதே கடிதத்தை காட்டியிருக்கலாம்

கடிதத்தில் இருப்பது என் மகளின் கையெழுத்தே இல்லை

என் மகளின் பொருட்களை கண்ணில் காட்டவில்லை

மகள் அணிந்திருந்த செயின் அறுக்கப்பட்டதாக சொன்னார்கள்

நகைகள் எங்கே என தெரியவில்லை

பிரேதத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசவில்லை

சிபிசிஐடியை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம்

மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்

ஒருவேளை உண்மை வராவிட்டால் சிபிஐ விசாரணைக்கும் செல்வேன்


Next Story

மேலும் செய்திகள்