ஜூலை 3ம் தேதி - வெளியான அதிர்ச்சி தகவல் | Summer

x

ஜூலை 3ம் தேதி தான் இதுவரை உலகளவில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பமான நாள் என்று சுற்றுச்சூழல் கணிப்புக்கான அமெரிக்க தேசிய மையம் அறிவித்துள்ளது...சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸை எட்டியது... இது கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான 16.92 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை முறியடித்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவுகிறது. 3ம் தேதி அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் வெப்பநிலை 116 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது... இந்த ஆண்டு இந்நகரில் பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும்... தெற்கு டெக்சாஸில் அதிகபட்சமாக சமீபத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.https://youtu.be/juR6rG3vmY8


Next Story

மேலும் செய்திகள்