கோலியுடன் ஜோஸ்வா டா சில்வாவின் தாய் சந்திப்பு... ஆரத்தழுவிய வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பரின் தாய்

x

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஸ்வா டா சில்வாவின் தாயார், விராட் கோலியை சந்தித்து மகிழ்ந்தார். போர்ட்-ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் கோலி பேட்டிங் செய்தபோது, தங்களது பேட்டிங்கை காண தனது தாயார் வந்திருப்பதாக கோலியிடம் ஜோஸ்வா டா சில்வா கூறினார். இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு, கோலியை ஜோஸ்வாவின் தாயார் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்