ஒரு சில ரசிகர்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஜடேஜா - தூக்கி வைத்து கொண்டாடிய தோனி

x

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த அந்த அணி வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களும், சஹா 54 ரன்களும் அடித்தனர்.

பின்னர் சென்னை அணி பேட்டிங் செய்தபோது மழை பெய்தது. இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு, கெய்க்வாட்-கான்வே ஜோடி அதிரடி தொடக்கம் தந்து ஆட்டம் இழந்தது.

அடுத்து வந்த ரஹானே, அம்பத்தி ராயுடு, அதிரடியாக ஆடி ஆட்டம் இழந்தனர். கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க மைதானத்தில் பேரமைதி...

கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் ஜடேஜாவும், துபேவும் நின்றனர்.

மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்து சென்னை அணியை ஜடேஜா வெற்றி பெற வைத்தார்.

இதன்மூலம், 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் ருசித்தது.

வெற்றிக்குப் பிறகு தோனியை நோக்கி ஜடேஜா ஓடிவர, ஜடேஜாவை அப்படியே தூக்கிக் கொண்டாடினார் தோனி...

கோப்பையையும், ராயுடு மற்றும் ஜடேஜாவை இணைந்து தோனி வாங்க வைத்தது, ரசிகர்களை நெகிழ வைத்தது.

5வது முறையாக கோப்பையை வென்றுள்ளதன் மூலம் மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது சென்னை...


Next Story

மேலும் செய்திகள்