இரண்டே நாள் தான்.. ஆள் எஸ்கேப் - 7வது திருமணத்துக்காக வீட்டை விட்டு ஓடிபோன சந்தியா

x

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே 6 திருமணங்கள் செய்து, ஏழாவது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். பரமத்தி வேலூரை அடுத்த கள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனபாலுக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடந்த 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 9-ஆம் தேதி காலையில் சந்தியா வீட்டில் இல்லை, பீரோவில் இருந்த பொருள்களையும் காணவில்லை.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தனபால் போலீசில் புகார் கொடுத்தார். இந்தச் சூழலில், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் தேடியபோது தரகர் மூலம் சந்தியாவின் புகைப்படம் வந்துள்ளது. அவர்கள் மூலமாக, சந்தியாவை திருச்செங்கோட்டுக்கு வரவழைத்தனர். அங்கு வந்த சந்தியாவையும் அவரது உறவினர் மூவரையும், தனபாலின் உறவினர்கள் மடக்கிப் பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சந்தியாவுக்கு இதுவரை 6 முறை திருமணம் நடந்துள்ளதும், 7-ஆவது திருமணத்துக்கு முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணத்தை அபகரித்தக் கொண்டு தப்பிச் செல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்