ஆபாச பட நடிகை வழக்கு கைதாக போகிறாரா ட்ரம்ப்? | USA

x

தான் செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி தனது ஆதரவாளர்களை அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்த ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இது குறித்த தகவலை 2016 அதிபர் தேர்தலின் போது வெளியிடாமல் இருக்க ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் தனக்கு 1 கோடி ரூபாய் வழங்கியதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதில் தான் வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்துமாறும் ட்ரம்ப் தனது Truth Social சமூக வலை தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்