2ஆக பிரிக்கப்படுகிறதா TNPSC ? - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

x

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி-ஐ 2ஆகப் பிரிக்கவும், புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இரண்டாகப் பிரிக்க இப்போது எந்தவிதமானத் தேவையும் எழவில்லை எனவும், இது செயல்பாட்டிற்கு வந்தால் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு முழுவதும் 500-க்கும் குறைவானோரை மட்டுமே தேர்ந்தெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அமைப்பை சிறுமைப்படுத்தும் செயல் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், புதிதாக ஏற்படுத்தப்படும் தேர்வு வாரியம் சட்டப்பூர்வமான அமைப்பாகவே இருக்கும் என்றும், அதில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பணிச்சுமை இருப்பதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவிக்காத நிலையில், இப்போது புதிய வாரியம் அமைக்க வேண்டிய தேவை என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்