பெங்களூருவில் பொழிந்த சிக்ஸர் மழை!.. இறுதி நிமிடம் வரை.. திக்.. திக்.. RCB-க்கு அதிர்ச்சி கொடுத்த CSK

x

பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 24 வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே, 83 ரன்கள் எடுத்தார். இதன்பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வேல் 36 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்