ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு மிரட்டல் - பாஜக நிர்வாகிகள் அதிரடி கைது

x

சென்னை புழல் அருகே ரியல் எஸ்டேட் மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். புழலை அடுத்த காவாங்கரையில் சௌமியா பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் சார்பில் நான்கரை ஏக்கர் நிலத்தில் வீட்டு மனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் வெங்கடேசன், ஏழுமலை ஆகிய இருவரும் பணம் அல்லது வீட்டு மனைக் கேட்டு மிரட்டுவதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் அமர்நாத், புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்