இன்ஸ்டாகிராம் சகவாசம் குலநாசம்.. 27வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி | Perambur

x

இன்ஸ்டாகிராம் மூலம் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி 40 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,கொடுங்கையூரைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இன்ஸ்டா கிராம் மூலம் மகேஷ் குமார் என்பவரை தெரிய வந்துள்ளது... மகேஷ் குமார் பல வங்கிகளில் கடன் பெற்று தருவதாக கூறி அப்பெண்ணை நம்ப வைத்துள்ளார். இதை நம்பி மகேஷிடம் அவர் 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் கடன் பெற்றுத்தராத நிலையில், சந்தேகம் அடைந்த அப்பெண் கொடுத்த பணம் மற்றும் நகைகளை மகேஷிடம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் மகேஷ் காலம் தாழ்த்தவே பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாரளித்துள்ளார்... ஆவணங்களை சரிபார்த்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கேளம்பாக்கம் மெயின் ரோடு, அரசு பள்ளி தெருவைச் சேர்ந்த மகேஷ் குமாரை கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் யார் யாரெல்லாம் கடன் குறித்த தகவல்களை தேடுகிறார்களோ அவர்களைத் தொடர்பு கொண்டு வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாக நம்ப வைத்து மகேஷ் பணப்பறிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. தனக்குத் தெரிந்த பல பேரிடம் 40 லட்சம் ரூபாய் வரை மகேஷ் குமார் மோசடி செய்து பணம் மற்றும் நகைகளை வாங்கி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த பணத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பணத்தை இரட்டிப்பாக்கும் தொழிலில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததும், சில லட்ச ரூபாயை தங்கத்தில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்