தேனியில் மக்களின் சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு... துணை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

x

தேனி அருகே குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாகக் கூறி, துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம், அணைப்பட்டியில் அரசு பள்ளி தெருவில் வசிக்கும் குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டும் மக்கள், இன்று துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்