இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி... 118 ரன்கள் என்ற எளிய இலக்கை, விக்கெட் இழப்பின்றி வென்றது ஆஸ்திரேலியா...

x

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து பந்து வீச்சாளர் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா, 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர்கள் ட்ராவிஸ் ஹெட்டும், மிட்ச்செல் மார்ஷும் அரை சதம் அடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்