இந்தியா Vs பாக். உலக கோப்பை ரூ.1 லட்சமாம்... - ரசிகர்களுக்கு இடியாய் விழுந்த ஓர் அதிர்ச்சி

x

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருப்பதால் அங்குள்ள ஹோட்டல்களில் ரூம் வாடகை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.....

ஐபிஎல்,டெஸ்ட் உலகக் கோப்பை என அடுத்தடுத்த கொண்டாட்டங்களால் குஷியாகி வந்த கிரிக்கெட் ரசிகர்கள், தற்போது அடுத்த கிரிக்கெட் திருவிழாவிற்கு தயாராகி விட்டனர்.

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியான பிறகு... கிரிக்கெட் ரசிகர்களின் குதூகலத்திற்கு அளவில்லை என்றாகிவிட்டது.

அதுவும் ஒருநாள் உலகை கோப்பை தொடரில் இந்தியா களமிறங்கும் முதல் போட்டி சென்னையில் நடைபெற இருப்பது...தமிழக ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்லது.

ஆனால் வெளியாகி இருக்கும் போட்டி அட்டவணையில்..... பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் மோதும் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதுவது அரிதாகி விட்ட நிலையில்... அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின் த்ரில் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர், ரசிகர்கள்.

இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது... என்பதாலேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

ஆனால் எகிறுவது எதிர்பார்ப்பு மட்டுமல்ல... அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களின் ரூம் வாடகையும் தான்.

அகமதாபாத்தில் உள்ள பல 5 ஸ்டார் ஹோட்டல்களில்... இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அன்றைக்கான ஹோட்டல் ரூம்கள் அனைத்தும் தற்போதே புக்காகி தீர்ந்து விட்டன.

பெரிய பெரிய ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல்களில் அன்றைய ஒரு தினத்திற்கான ரூம் வாடகை மட்டும் ஒரு லட்சத்தை தொட்டிருப்பது... இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண எந்த அளவிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக ஆவல் கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

தற்போது வரை ஒரு நாள் வாடகையாக 5000 முதல் 8000 ரூபாய் வசூலிக்கப்படும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல்களில் அக்டோபர் 15ஆம் தேதிக்கான ஒரு நாள் ரூம் வாடகை 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் ஹோட்டல்ஸ் மற்றும் ரெஸ்டாரன்ட்ஸ் அசோசியேஷன் தெரிவிக்கையில், அக்டோபர் 15 ஆம் தேதிக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்பவர்களில் பெரும்பாலா னோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

தேவை அதிகரித்திருப்பதால் அனறைய தினத்திற்கான ரூம் வாடகை பத்து மடங்குக்கு அதிகமாக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் போட்டிக்கான தேதி நெருங்கும் சமயத்தில்... ஹோட்டல் ரூம்க்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்பதால்... அகமதாபாத்தில் ஹோட்டல்களின் ரூம்

வாடகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்