2037-ல் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா...ஏற்கனவே பிரிட்டனை ஓவர் டேக் பண்ணியாச்சு - இனி அமெரிக்கா, சீனாதான் பென்டிங்

x

உலகப் பொருளாதார வளர்ச்சி பட்டியலில், இந்தியா 2037ம் ஆண்டுக்குள் 3வது இடத்திற்கு முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 6வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, 5வது இடத்திற்கு முன்னேறியது. இதனிடையே, ஜெர்மன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, 2037ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் 3 இடங்களை சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் தக்கவைக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்