"வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு..இது மக்கள் நம்பிக்கையின் சாட்சி..." - பிரதமர் மோடி

x

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் சாட்சியாக திகழ்வதாகப் பிரதமர் மோடி கூறி உள்ளார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில், காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி இருப்பதாகக் கூறினார். உலகளாவிய விநியோக சங்கிலியில் இந்தியா இன்று முக்கிய அங்கமாக இருப்பதாகவும் இந்த வாய்ப்புகளின் பலன்களை இந்தியா அறுவடை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார். முதலீட்டு செலவீனங்களுக்கான தொகை இந்த பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்த பிரதமர், அரசை போல தனியார் துறையும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்