ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் தகராறு.. இளைஞர் கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி.. புதுக்கோட்டையில் தொற்றிய பதற்றம்

x
  • கீரனூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.
  • அப்போது மர்ம நபர்கள் கற்களைக் கொண்டு தாக்கியதில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒடுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின் என்ற 21 வயது இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
  • அவரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும்போது, அவர்களுடன் ஒடுக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், வீரமணி ஆகிய 2 இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
  • சேமத்துப்பட்டி பிரிவு சாலை அருகே வரும்போது அவர்களை வழிமறித்த ஒ.பள்ளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தி விக்னேஷ்வரனின் கழுத்தில் இரும்புக் கம்பியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
  • படுகாயம் அடைந்த விக்னேசுவரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • ஆத்திரத்தில் விக்னேசுவரனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கீரனூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்ததோடு போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்...
  • மேலும் அங்கு குவிந்த சிலர் ஆத்திரத்தில் அரசு மருத்துவமனையின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்