போலீசாரை தட்டிவிட்டு தப்பிய 3 பேர்..தவறவிட்ட பையில் கிடைத்த நோட் - ஷாக்கான போலீஸ்...

சென்னையில், 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
x

சென்னை புது வினோபா நகரைச் சேர்ந்த ஜாஹிர் உசேன், நவாஸ், நாகூர் மீரான் ஆகிய 3 இளைஞர்கள், சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இந்த 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்ததை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், போலீசாரை தட்டிவிட்டு 3 பேர் தப்பிச் சென்ற நிலையில், தாங்கள் கொண்டு வந்த பையை தவறவிட்டுள்ளனர். அதில் இருந்த நோட்டில், வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான செயல்முறை விளக்கம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரையும் மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட நாகூர் மீரானின் வீட்டில் இருந்து ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. கைதான 3 பேருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதால், இந்த வழக்கை, தேசிய புலனாய்வுத்துறை விசாரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்