"உன்ன விட்டுட்டு போறேன்..பசங்கள பாத்துக்கோ..இதுக்கு மேல நா இருக்க மாட்டேன்..." - வீடியோ வெளியிட்டு தொழிலாளி விபரீத முடிவு

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடன் அதிகமானதால், விஷம் அருந்தி கூலித் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். மேலிருப்பு கிராமத்தை சேர்ந்த தமிழ்குமார் என்பவர், ஆன்லைன் ரம்மி விளையாடி, ஐந்து லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்து, கடன் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழ்குமார் வெளியிட்ட வீடியோவில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருப்பதாகவும், ஆன்லைன் ரம்மியை முற்றிலும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்