"எனது பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் செய்தது மகிழ்ச்சி"... விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்கு நடிகர் விஜய் கடிதம்

x

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை நீலாங்கரையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சரவணன் என்பவர், பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தனது சொந்த செலவில், உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டார். இதையறிந்த நடிகர் விஜய், தனது கைப்பட சரவணனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் செய்தது மகிழ்ச்சி என, குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்