"தொழிலாளர்களுடன் மோதல்-ஊடல் இருந்தாலும் கூடலுடன் இருப்பேன்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

தொழிலாளர்களுடன் எப்போதும் தமக்கு நட்பு கலந்த மோதல் உள்ளது என்றும், அந்த மோதல் ஊடலாக இருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வின் 25ம் ஆண்டு விழா 3 நாள் மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அடித்தட்டு மக்களுக்கான இயக்கமாக உள்ளது என்றார். தொழிலாளர்களுடன் எப்போதும் நட்பு கலந்த மோதல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்