"எனக்கு நோபல் பரிசு கிடைத்ததே வலைப்பக்கத்தை பார்த்து தான் தெரியும்" - அமெரிக்க விஞ்ஞானி தகவல்

x

"எனக்கு நோபல் பரிசு கிடைத்ததே வலைப்பக்கத்தை பார்த்து தான் தெரியும்" - அமெரிக்க விஞ்ஞானி ஆச்சரியத் தகவல்

தனக்கு நோபல் பரிசு கிடைத்ததே வலைப் பக்கத்தைப் பார்த்து தான் தெரியும் என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற ஃபிலிப் டிப்விக் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியரான டிப்விக் நிதி நெருக்கடியின் விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து, வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என்ற ஆய்வறிக்கைக்காக நோபல் பரிசு பெற்றார்... பொருளாதார நிபுணர்கள் பென் பெர்னன்கே, டக்ளஸ் டைமண்ட், ஆகியோருடன் தனது நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட டிப்விக், சுவீடன் அகாடமியின் வலைப்பக்கத்தைப் பார்த்ததன் மூலமே தனக்கு நோபல் பரிசு கிடைத்தது தெரியும் என்று தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்