முதல் மனைவி செய்த சம்பவத்தால்... பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி - காவல் நிலையம் அருகே கணவன் செய்த விபரீதம்

x

முதல் மனைவி செய்த சம்பவத்தால்... பிரிந்து சென்ற இரண்டாவது மனைவி - காவல் நிலையம் அருகே கணவன் செய்த விபரீதம்


கரூர் மாவட்டம் குளித்தலையில், குடும்பத்தகராறில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, கட்டளை கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திரன் - சத்யா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இத்தம்பதி கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, கணவனை இழந்து வாழும் ஆசிரியை ஒருவரை தர்மேந்திரன் இரண்டாவதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சத்யா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், தர்மேந்திரனும், 2வது மனைவியும் விசாரணைக்காக காவல்நிலையம் வந்துள்ளனர். அப்போது, தனக்கு தர வேண்டிய 3 லட்சம் ரூபாய் பணத்தை தருமாறு தர்மேந்திரனிடம் கூறிவிட்டு, 2வது மனைவி அங்கிருந்து சென்றுள்ளார். 2வது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார் என்ற விரக்தி அடைந்த தர்மேந்திரன், குளித்தலை காவல்நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்