தூங்கி கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்து - ரயிலில் தள்ளிக் கொன்ற கணவன் - பதைபதைக்கும் சிசிடிவி

x

தூங்கி கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்து - ரயிலில் தள்ளிக் கொன்ற கணவன் - பதைபதைக்கும் சிசிடிவி


மும்பை ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தூங்கிக் கொண்டிருந்த மனைவியை இழுத்து சென்று தண்டவாளத்தில் கணவன் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் வசை ரயில் நிலையத்தில் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது, தூங்கி கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்று தண்டவாளத்தில் தள்ளிட்டு, இரு குழந்தைகளை ஒருவர் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விசாரணையில் அந்த நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பதும், மனைவியை திட்டமிட்டு ரயிலில் தள்ளி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த வசை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்