பல்கலைக்கழகங்களில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள்..?வெளியான புது தகவல்

x

தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களில், 2 ஆயிரத்து 297

நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஆயிரத்து 265 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களில் தற்போது கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதேபோல், இந்த 13 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு 6 ஆயிரத்து 749 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அவற்றில், 3 ஆயிரத்து 394 பணியிடங்கள் காலியாக உள்ளன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் உபரியாக உள்ளனர். (card-4)பல பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் முறையில் இடங்களை நிரப்பி உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.

இதேபோல், பல பல்கலைக்கழகங்களில் நிரந்தர பதிவாளர் , தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களும் காலியான உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்