செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் வீரர் திடீர் தர்ணா - என்ன நடந்தது?

x

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் வீரர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8 வது சுற்றில், ஹாங்காங் அணி ஹெய்டி அணியை எதிர்கொண்டது.

இதில் ஹாங்காங் அணியில் முதல் இருக்கையில் விளையாடிய லௌ லட் இன் லுக், ஹெய்டி அணியின் ஜூடியுடன் விளையாடினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியில் வந்த லௌ, அரங்கத்தின் வாயிலில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து விசாரித்தபோது, நடுவர் பாரபட்சமாக நடந்துகொண்டதாகவும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு பின் ஆட்டத்தை டிரா என அறிவித்தாகவும் குற்றம் சாட்டினார்.

தனக்கு தேவையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறினார்.

பின்னர், செஸ் கூட்டமைப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்