விதவிதமாய் வித்தியாசமாய்... சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் ஹோம் மேட் சாக்லெட்டுகள்

x

கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான சாக்லெட்டுகள் தயாராகி வருகின்றன. கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தவையோ, அதே அளவிற்கு அங்கு விற்கப்படும் ஹோம் மேட் சாக்லெட்டுகளும் சிறப்புமிக்கவை. இந்நிலையில், அடுத்த வாரம் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் லட்டசக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால், சாக்லெட் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் லாலி பாப், பல வண்ணங்களில் ஜெல்லி மிட்டாய்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சுவைக்கும் வகையில் சுகர் ஃப்ரீ சாக்லெட்டுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்