வகுப்புக்குள் வைத்து HM-க்கு அடி, உதை..! -அலறி துடித்த மாணவர்கள் - சொந்த ஸ்கூலுக்கே பூட்டு - ஷாக் தந்த தாளாளர்!

x

தேனி திட்டச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது...

அங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 30 மாணவர்கள் படித்து வரும் நிலையில்... சென்றாய பெருமாள் என்ற ஒரு தலைமையாசிரியரும், சுமதி என்ற ஒரு ஆசிரியையும் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளனர்...

அதே பள்ளியில் தாளாளாராக பொறுப்பு வகித்து வந்த அன்பழகன் என்பவர், தேனி அல்லி நகரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்....

இந்நிலையில், அன்பழகன் அரசு உதவி பெறும் பள்ளியை நடத்தி வருவதை மறைத்து, மற்றொரு அரசு பள்ளிக்கு தலைமையாசிரியராக இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு அன்பழகன் மீது எழுந்துள்ளது...

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகாரளிக்கப்பட்ட போது, அதிகாரிகள் அன்பழகனிடம் பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது...

இந்நிலையில், தன்னைப்பற்றி இந்த குற்றச்சாட்டை உயர் அதிகாரிகளுக்கு யார் தெரிவித்திருப்பார்கள் என யோசித்து வந்த அன்பழகன்... அவர் பள்ளி தாளாளராக பணிபுரிந்த வரும் பள்ளியின் தலைமையாசிரியர் சென்றாய பெருமாளும், ஆசிரியர் சுமதியும் தான் என்னை பற்றி புகாரளித்திருக்கிறார்கள் என எண்ணியிருக்கிறார்...

இதையடுத்து, பள்ளிக்கு சென்ற அன்பழகன் ஆசிரியரை சென்றாயபெருமாளை அடித்து துன்புறுத்திய நிலையில், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது...

இந்த வழக்கில் நீதிமன்றம் வரை சென்ற ஆசிரியர்கள் பின்பு அரசிடம் இருந்து நேரடியாக ஊதியம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது...

இந்நிலையில், சம்பவத்தின்று பள்ளிக்கு வந்த தாளாளர் அன்பழகன், இது தன்னுடைய பள்ளி என்றும், என்னை பற்றி எப்படி புகாரளிக்கலாம் என கூறி தலைமையாசிரியர் சென்றாய பெருமாளை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இதோடு நிறுத்தாமல் ஆத்திரத்தில் தலைமையாசிரியருடன், 25 குழந்தைகளையும் பள்ளியினுள் வைத்து அன்பழகன் பூட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பானது அந்த பகுதி..

ஏற்கெனவே தலைமையாசிரியர், அன்பழகனால் தாக்கப்படுவதை கண்டு பதறி போன மாணவர்கள், ஒரு அறையில் நாம் பூட்டப்பட்டுள்ளோம் என்பதையறிந்து கதறினர்.. மாணவர்களின் கதறல் அக்கம்பக்கத்தினரை பதற்றமடைய செய்தது...

இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளியை திறந்து மாணவர்களை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்...

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தீவிர விசாரணையில் இறங்கியுள்ள அதிகாரிகள் மற்றும் போலீசார், தலைமறைவான அன்பழகனை தேடி வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்