ஹிமாச்சல் முதல்வர் துணை முதல்வர் இன்று பதவியேற்பு

x

ஹிமாச்சல பிரதேசத்தில், மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது.

பா.ஜ.க. 25 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சுயேட்சைகள், 3 இடங்களை கைப்பற்றின.

இதனைத் தொடர்ந்து ஹிமாச்சல் மாநில சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஹிமாச்சல் மாநில முதல்வராக சுக்வீந்தர் சிங் சுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் சத்தீஸ்கர் மாநில முதல்வருமான பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஹிமாச்சல் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் சுக்விந்தர் சிங் சுக்கு.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வராக உள்ள முகேஷ் அக்னி ஹோத்ரி உடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்