சுங்க வரி ஏய்ப்பு...காஃபிபோசா சட்டத்தின் கீழ் தொழிலதிபருக்கு சிறை உத்தரவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

x

சென்னையில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் சுங்க வரி ஏய்ப்பை செய்தவரை, காஃபிபோசா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு வைத்தியநாதன் என்பவரின் வீட்டில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், எழும்பூரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வந்த ஜாகிர் உசேன் என்பவர், நகைகளுக்கான செயற்கை கற்களை இறக்குமதி செய்வதாக கூறி, ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்து தெரியவந்தது. இதையடுத்து, அவரை தமிழக அரசு சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஜாகிர் உசேன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஜாகிர் உசேனை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்