தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை

x

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான சேவூர், இரும்பேடு, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள பேருந்து நிலையம் முன்பு தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்

கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அங்கு, கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான குடியாத்தம், நெல்லூர்பேட்டை, மேல்ஆலத்தூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்