Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-04-2023) | Morning Headlines | Thanthi TV

x

தமிழகம், புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது...

9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்...


பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உயர்கல்வி படிக்க வழிவகை செய்யப்படும்...

முதல்வர் திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...


கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக எரியூட்டப்பட்டது....


நெய்வேலி அருகே நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை...

மாதிரி தேர்வில் உரிய மதிப்பெண் எடுக்காததால் மன உளைச்சல் என தகவல்...


பிரதமர் வருகையை முன்னிட்டு எட்டாம் தேதி காலை 6 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை டிரோன்கள் பறக்க தடை...

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு...


பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில், முன்னாள் மாணவி போலி புகார் எனக் குற்றச்சாட்டு...


நெல்லை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமனம்...

பல் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை தொடரும் நிலையில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர் ரெட்டி உத்தரவு...


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்றென்றும் துணை நிற்கும்...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...


திருச்சியில், ஏப்ரல் 24ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளதாக தகவல்...

சட்டமன்ற கூட்டத்தொடர் 21ஆம் தேதி நிறைவடையும் நிலையில் 24ஆம் தேதி மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டம்...


15 கோடி ரூபாய் கடனை செலுத்தும் வரை நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை...

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு...


திருச்சியில் ரயிலில் நடிகை நயன்தாராவை புகைப்படம் எடுத்த ரசிகர்கள்....

படம் எடுக்கக்கூடாது என கோபப்பட்ட நயன்தாரா...


அரசியலில் நுழையும் 'நான் ஈ' புகழ் நடிகர் கிச்சா சுதீப்...

கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக அறிவிப்பு...


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்....

5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி...


ஐ.பி.எல் தொடரின் 9வது லீக் போட்டியில் இன்று, கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.....

இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது....


Next Story

மேலும் செய்திகள்