இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

அரசின் நலத்திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க, மாதந்தோறும் 2 இடங்களுக்கு சென்று அதிகாரிகள் கள ஆய்வு செய்ய வேண்டும்.....

தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...


காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி....

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.....


தமிழகத்தில் ஒரே நாளில் 60 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை....

கணக்கில் வராத 33 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்....


பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்....

முதல் நாள் தேர்வில் பங்கேற்காத மாணவர்களே, மீண்டும் வரவில்லை என தகவல்.....


புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை.....

வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.....


கொச்சி குப்பை கிடங்கு தீ விபத்து தொடர்பாக மூன்றடுக்கு விசாரணை நடத்த அரசு உத்தரவு....

கேரள சட்டப்பேரவையில், முதல்வர் பினராயி வியஜன் உறுதி.....


டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது, ஐ.சி.சி......

869 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார், அஸ்வின்.....


ஐசிசி பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில், 10வது இடத்திற்கு முன்னேறினார், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா.....

எட்டு இடங்கள் முன்னேறி13ஆம் இடத்தை பிடித்தார், விராட் கோலி ....


Next Story

மேலும் செய்திகள்