Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதால் திமுக அரசை சிலர் எதிர்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

தமிழக கேரள அரசுகள் இணைந்து வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் எனவும் விருப்பம்...


பாரதியார், பெரியார் வழியில் இடதுசாரிகள் செயல்படுவதாக கேரள முதல்வர் பினரயி விஜயன் பெருமிதம்...

வைக்கம் போராட்ட விழாவுக்கு வருமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு...


தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களுக்கு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து...

இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை...


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாநில கட்சி கூட இல்லை. அது ஒரு மாவட்ட கட்சி என ஹெச்.ராஜா விமர்சனம்...

ஊர்க்குருவி எவ்வளவு உயரமாக பறந்தாலும் பருந்தாக முடியாது எனவும் கருத்து...


பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா...

அதிமுக-வில் இணைந்த நிர்மல் குமாரை தொடர்ந்து, ஐ.டி பிரிவு செயலாளர் திலீப் கண்ணனும் விலகினார் - அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள்...


நிர்மல் குமாரை அதிமுக-வில் இணைத்துக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி டுவீட்...

ஈரோடு கிழக்கில் அதிமுக தோல்வியை சுட்டிக்காட்டி, விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் ஆவேசம்...


அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைக்க பரிந்துரை.....

அமைச்சர் சிவசங்கர் தகவல்....


மே மாதம் 7-ம் தேதி நீட் தேர்வு. நடைபெறுகிறது...

ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு....


இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நீடிப்பார்....

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.....


மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் மும்பை அணி அபார வெற்றி ....

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.........


Next Story

மேலும் செய்திகள்