Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்...

2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன...


கும்பகோணம் மகாமகம் குளத்தில் இன்று தீர்த்தவாரி...

மூன்று கோயில்களில் நேற்று கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது...


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஒலிபெருக்கியில் ஒலித்த காதல் பாடல்கள்...

ஓம் நமச்சிவாய என்ற பாடலுக்கு பதில், வேறு பாடல் ஒலிபரப்பானதால் பக்தர்கள் அதிர்ச்சி...


சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களை தூண்டும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...


பீகார் தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை..


வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக, தமிழகம் வந்துள்ள பீகார் குழு கருத்து...

வேறு மாநிலங்களில் நடந்த தாக்குதல் வீடியோக்கள், தமிழகத்தில் நடந்தது போன்று பரப்பப்பட்டுள்ளதாகவும் விளக்கம்....


வெளி மாநிலத்தவர் பற்றி தவறான செய்தியை யார் பரப்பினாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை...


மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...

வட மாநிலத்தவர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என தமிழகத்தில் ஆய்வு செய்வதற்கும் விமர்சனம்...


தமிழகத்தில், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வதந்தி பரப்புகின்றனர்...

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றச்சாட்டு...


பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழக மண்ணில் ஒருபோதும் எடுபடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாகவும் கண்டனம்...


தமிழக மக்களுக்கே ஒன்றும் செய்யாதவர், தேசிய அரசியலுக்கு போக கனவு காண்கிறார்...

முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...


சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்த நபர் தற்கொலை...

கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான நிலையில் மெரினா கடற்கரையில் சடலமாக மீட்பு...


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்...

நீதிமன்றத்தில் கட்சியினரை போலீசார் தடுத்ததால் பரபரப்பு...


வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து...

சுகாதார நிலையம் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதம்...


Next Story

மேலும் செய்திகள்