Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-12-2022) | Morning Headlines | Thanthi TV

x

குஜராத்தில் இன்று 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல்...

ஆகமதாபாத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை வாக்களிக்கின்றனர்...


இன்று காலை டெல்லி செல்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்....

பிரதமர் தலைமையில் நடைபெறும் ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்....


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை டெல்லி செல்கிறார்...

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி 20 அமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார்...


பொள்ளாச்சியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்த கட்சி அலுவலகத்துக்கு சீல்...

வருவாய் துறையினரின் நடவடிக்கையால் காங்கிரசார் அதிர்ச்சி...


இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு...

நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 9.30 மணிக்கு மரியாதை செலுத்துகிறார்...


ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணியாக சென்று இன்று காலை 10.30 மணிக்கு ஓ.பி.எஸ். மரியாதை செலுத்துகிறார்...

சசிகலா, தினகரன் உட்பட பல அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்