தேங்கிய ஆற்றில் .. பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை படகாக மாற்றி பயணிக்கும் அவலம்... ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம்

x
  • திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, செண்பகத்தோப்பு ஆற்றின் குறுக்கே புதிய நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என, பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஜவ்வாது மலை ஒன்றியத்துக்குட்பட்ட செண்பகத்தோப்பு, பலாமதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை ஒட்டி, செண்பகத்தோப்பு காட்டாறு செல்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து வரும் தண்ணீர், ஆற்றில் அதிகளவு தேங்கியதுடன், மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையும் நீரில் மூழ்கியது
  • இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், செல்லும் சாலை கடந்த ஆறு மாதங்களாக துண்டிக்கப்பட்டது.
  • அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆற்றின் கரையை கடந்து செல்ல வேண்டும் என்பதால், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை படகு போல் அமைத்து, பள்ளி மாணவர்களும், மலைவாழ் மக்களும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
  • ஆற்றின் குறுக்கே புதிய நடை மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என, பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்