டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து - இருவர் சம்பவ இடத்திலேயே பலி

x

டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் கலவை எந்திரம் பூட்டிய டிராக்டரில் சென்றுக் கொண்டிருந்தனர். கெடிலம் ஆற்று பாலம் வழியாக சென்றபோது, டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வசந்தகுமார், நாவலேரி அம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 7 பேர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்