"தடம்புரள்கிறார் தமிழக ஆளுநர்" - முரசொலி காட்டம்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பதவிக்குரிய பொறுப்புணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரள்வதாக, திமுக நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில், தேவையற்ற விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு, தனது ஆற்றலையும் அறிவையும் காட்டுவதாக எண்ணி தாறுமாறாகப் பேசி, தமிழ் மக்களின் உணர்வோடு விளையாடத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்களிடம், திராவிட மாடல் குறித்து ஆளுநர் ரவி விமர்சனம் செய்ததாகவும், தமிழக ஆளுநர், தனது பதவிக்குரிய பொறுப்புணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரளுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய, ஆளுநருக்கு சம்பளம், மாளிகை, பாதுகாப்பு, ஏவலாளிகளை மாநில அரசு தரவில்லை என்றும் முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.இதனால் தமிழகத்தின் பல திக்குகளிலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உருவாகி உள்ள எதிர்ப்புகள் சிறு பொறிகளாக தெரிந்தாலும், நாளை பெருந்தீயாக மாறாது என்பது யாரும் உத்தரவாதம் தர இயலாது என்றும் இது எச்சரிக்கையல்ல, நிலை விளக்கமே எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்