"கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரண விவகாரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பின் பள்ளியை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்