உள்ளாடையில் ரூ.48 லட்சம் மதிப்பு பொருள் - அதிர்ச்சியில் சுங்கத்துறையினர்

x

கொச்சி விமானநிலையத்தில் பேன்ட் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, கோழிக்கோட்டை சேர்ந்த சவுகத் என்பவர், பேன்ட் மற்றும் உள்ளாடைகளில் பசை வடிவிலான தங்கம் மறைத்து வைத்திருந்த‌தை கண்டுபிடித்தனர். இதன் சந்தை மதிப்பு 48 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்