சீட்டாக்களை பாதுகாக்க களமிறங்க போகும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள்

x

மத்திய பிரதேசத்தில் சீட்டாக்களை வேட்டையாடலில் இருந்து பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படை களமிறக்கப்படுகிறது.

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.

இவைகளை வேட்டையிலிருந்து பாதுகாக்கும் வகையில் சூப்பர் மோப்பநாய் படை களமிறக்கப்படுகிறது.

இதற்காக அரியானாவில் இந்தோ - திபெத்தின் எல்லைப் பாதுகாப்பு படையின் நாய்கள் பயிற்சி முகாமில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

சிறுத்தையின் தோல்கள், எலும்புகள், யானை தந்தங்கள் மற்றும் பிற உடல் பாகங்களை அடையாளம் காணவும், கண்காணிப்பு போன்ற திறன்களை கற்றுக்கொள்ளவும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது .

7 மாத கடின பயிற்சிக்கு பின்னர் ஏப்ரலில் இந்த சிறப்பு படை பாதுகாப்பு பணியில் களமிறங்கும் என தெரிவிக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்