ஃப்ரிட்ஜில் மின் கசிவு..வெடித்து சிதறிய சிலிண்டர்.. மூதாட்டி மீது விழுந்த கற்கள்.. சித்தர் பீடத்தில் நடந்த பயங்கர தீ விபத்து

x

ஃப்ரிட்ஜில் மின் கசிவு..வெடித்து சிதறிய சிலிண்டர்.. மூதாட்டி மீது விழுந்த கற்கள்.. சித்தர் பீடத்தில் நடந்த பயங்கர தீ விபத்து

வேடசந்தூர் அருகே சித்தர் பீட அன்னதான கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் தோப்புப்பட்டி குச்சிசாமியார் ஜீவசமாதி சித்தர் பீடத்தில், அன்னதான சமையல் கூடத்தில் இருந்த ஃப்ரிட்ஜில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியுள்ளது. தொடர்ந்து மள மளவென பரவத் தொடங்கிய தீயில், சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இதில் ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் கற்கள் பெயர்ந்து, மருதாம்பாள் என்ற மூதாட்டி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்