ரயில் டிக்கெட் புக்கிங் ஆஃப்பான IRCTC-க்குள் புகுந்து விளையாடிய கும்பல் - வேலூரில் மாஸ்டர் மைண்ட்டை தூக்கிய போலீஸ்

x

போலி சாப்ட்வேரை பயன்படுத்தி, ரயில்வே டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து, அதிக விலைக்கு விற்ற சம்பவத்தில் முக்கிய நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

வேலூரில், IRCTC SOFTWAREக்குள் சென்று, விரைவாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து மோசடி கும்பல் ஒன்று, அதனை அதிக விலைக்கு விற்பதாக ரயில்வே துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தபோது, சாப்ட்வேரை பயன்படுத்தி, ஐஆா்சிடிசி இணைய தளத்திற்குள் சென்று விரைவாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அந்த சாப்ட்வேரை பீகார் பகுதியில் இருந்து வாங்கியது தெரியவந்தது. பின்னர் பீகார் விரைந்த தனிப்படை போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சாப்ட்வேரை விற்பனை செய்து வந்த சைலேஷ் யாதவ் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்