பேன்சி கடையை அடித்து நொறுக்கிய கும்பல் - தேர்தல் முன்பகையால் தாக்கியதாக தகவல்

x

புதுக்கோட்டையில் பேன்சி கடையை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவர், அப்பகுதியில் பேன்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடையில் ஊழியர் கோபாலகிருஷ்ணன் இருந்தபோது, அங்கு வந்த 6 பேர் கடையை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

மேலும், கடை ஊழியர் கோபாலகிருஷ்ணனை தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றனர்.

உள்ளாட்சி தேர்தல் முன்பகையால், கடையை அடித்து உடைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்