உள்குத்தாக கோலிக்கு அட்வைஸ் செய்த கம்பீர்

x

டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி எவ்வாறு ஆட வேண்டும் என முன்னாள் வீரர் கம்பீர் அறிவுரை வழங்கி உள்ளார். விளையாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கம்பீர், இந்தியாவை வெற்றி பெற வைக்கும் நோக்கில், விராட் கோலி இந்த தொடரில் ஆட வேண்டும் என்றும், தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தும் பொருட்டு, தனக்காக ரன் அடித்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றும் கூறி உள்ளார். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்தக் கூடாது எனக் கூறியுள்ள கம்பீர், கோப்பையை வெல்வதற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பேசி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்