ஆரம்பிக்கலாங்களா...பெரிய டிரம்களில் விடிய விடிய மெகா பிரியாணி விற்பனை

x

கோவையில் மிலாடி நபியை முன்னிட்டு, பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில், மிலாடி நபி விழாவையொட்டி பிரியாணி தயாரிக்கும் பணி நேற்று இரவு முதலே நடைபெற்றது.

பள்ளிவாசல் அருகே, 50க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அண்டாக்களில் 2 ஆயிரம் கிலோ அரிசியை கொண்டு, சுமார் 10 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது. விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு, இன்று காலை முதல் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பிரியாணியை வாங்கி சென்றனர். இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகையில், மிலாடி நபி திருநாளில் அனைத்து மக்களுக்கு பிரியாணி சாப்பிட்டு மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில், ஆண்டுதோறும் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்