தொடங்கியது புதுச்சேரி - சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து... வாரத்திற்கு எத்தனை முறை இந்த கப்பல் செல்லும்?

x
  • புதுச்சேரியில் இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • அதன்படி, சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதிய துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து இரு வாரத்திற்கு முன்பு சிறிய ரக சரக்கு கப்பலானது வெள்ளோட்டமாக புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்தது.
  • அந்த கப்பலை புதிய துறைமுகத்தில் நிறுத்தி வைத்து கண்டெய்னர்கள் கையாள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • இதையடுத்து, சரக்கு கப்பல் புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட து. 28ஆம் தேதி சரக்குகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி திரும்ப உள்ளது.
  • வாரத்தில் 2 நாட்கள் புதுச்சேரி - சென்னை இடையே சரக்கு கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - புதுச்சேரி - தூத்துக்குடி இடையே கடல்வழி பயணிகள் போக்குவரத்துக்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்