நாட்டிலேயே முதல்முறை...சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கும் அரசு!

x

நாட்டிலேயே முதலாவதாக பீகாரில் இன்று முதல் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு துவங்கியுள்ளது. இந்திய மக்கள் தொகையை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் பீகாரில் இன்று முதல் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த கணக்கெடுப்புக்காக 500 கோடி ரூபாய் செலவிட முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. வீடுகள், வீட்டில் வசிப்போரின் எண்ணிக்கை, சாதி, ஆண்டு வருமானம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படும். இரண்டாம் கட்ட சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாதி வாரியாக மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதால், பின் தங்கிய வகுப்பினருக்கு உரிய சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்க உதவியாக இருக்கும் என்று நிதீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்