அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு | பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

x

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு செயலி மூலம் வருகைப் பதிவு மேற்கொள்ளப்பட உள்ளதாக கடந்த 25ஆம் தேதி தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்து பல்வேறு மறுப்புகள் சமூகவலைதளங்களில் உலா வந்தன. இந்நிலையில், ஆசிரியர்களும், மாணவர்களும் நாளை முதல் வழக்கமான வருகை பதிவேட்டை மேற்கொள்ள வேண்டாம் என்றும், கல்வித்துறை செயலி மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் தந்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தி தற்போது உறுதியாகி உள்ளது. பள்ளிகளில் ஏற்கனவே செயலி மூலமாக பல்வேறு விவரங்களை பதிவு செய்யும் போது தேவையில்லாத காலதாமதம் ஏற்படுவதாக கூறும் ஆசிரியர்கள் செயலி மூலம் வருகைப்பதிவை மேற்கொள்வது மேலும் கால தாமதத்தை உருவாக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்