கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - சொந்த ஊர் திரும்பியும் தீபாவளி கொண்டாட முடியாத அவலம்

x

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆறாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் மீண்டும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று இரவு முதல் வெள்ள நீர் படிப்படியாக உயர்ந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன‌அடி நீர் பழையாறு கடலில் கலந்து வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கரையில் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளை மணல், கோரைதிட்டு உள்ளிட்ட திட்டு கிராமங்கள் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்கு திரும்பிய மக்கள், மீண்டும் உடைமைகளுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களில் பணியாற்றி வரும் இளைஞர்கள் உள்ளிட்டோர், தீபாவளியை கொண்டாடுவதற்காக வந்திருந்த நிலையில், வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதைக் கண்டு வேதனை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்